பாகிஸ்தான், ஆப்கான் இடையில் சமரசம்: ஈரான் களத்தில்!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் முன்வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கும், அதன் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே, டி.டி.பி., எனப்படும் தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக மோதல் உள்ளது.

இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இதை, ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றன.

போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக மூன்று கட்டங்களாக பேச்சு நடந்தும், எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த பதற்றங்களை தீர்க்கவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் சக முஸ்லிம் நாடு மற்றும் அண்டை நாடு என்கிற விதத்தில் பாகிஸ்தானுக்கு உதவ விரும்புவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles