மஸ்கெலியா, சமனெளிய சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நேற்று வழங்கப்பட்டன.


செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், தரம் ஒன்று முதல் ஐந்துவரை கல்வி பயிலும் 111 மாணவர்களுக்கு 10, 000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்பட்டது.

தரம் 6 முதல் 12 வரை கல்வி பயிலும் 159 மாணவர்களுக்கு 8000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.










