பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு தியேட்டரில் ‘பொன்னியின் செல்வன்’ படம் – விசாரணை ஆரம்பம்

முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவனம் யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்குப் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே, இவ்வாறு பாடசாலை நாளில் மாணவர்களைத் தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து 1,500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles