“பாட்டாளி விடுதலையின் கூட்டாளி” – தொண்டமான் குறித்து கவிதை போட்டி நடத்துகிறது இ.தொ.கா.!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிறந்த தினம் மற்றும் சிரார்த்ததினத்தை முன்னிட்டு கவிதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் சிரேஷ்ட ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து தெரிவித்துள்ளார்.

கவிதைக்கான தலைப்புகள் வருமாறு:

தடம் பதித்த தானைத் தலைவன், இலக்கு நோக்கி இனிய பயணத்தில் ஆறுமுகன் தொண்டமான்,

பாட்டாளி விடுதலையின் கூட்டாளி, தலைவரது புகழைச் சொல்ல நாள் போதுமா,

உழைப்போருக்கு தோழன், ஏய்த்து பிழைப்போருக்கு…

கட்டுரைக்கான தலைப்புக்கள்:

ஆளுமையின் அடையாளம் அமரர் ஆறுமுகன் தொண்டமான், இன்றைய மலையகத்தின் இனிய நினைவுகளில் அவர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பாதை, இளைய தலைமுறையின் இங்கிதமான வழிகாட்டி, சமூக எழுச்சிக்கு வித்திட்ட வீரமகன் கவிதை 150 சொற்களுக்குள்ளும், கட்டுரை 800 சொற்களுக்குள்ளும் உள்ளடங்கி இருக்க வேண்டும். படைப்புக்கள் A4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டும். பெயர், முகவரி தனியாக ஒரு தாளில் எழுதப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் வெளியானவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் படைப்புகளுக்கு சன்மானமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு அவை தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும்.

படைப்புக்கள்; 15.03.2023க்கு முன்னர் பதிவுத் தபாலில் ‘போட்டி ஏற்பாட்டாளர், இ.தொ.கா, இல. 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேலதிக தகல்களுக்கு தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 071-6876548/ 070-4329131

Related Articles

Latest Articles