பாதாள குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கலென பதற்றம்!

சட்டம் தற்போது உரிய வகையில் அமுலாகி வருகின்றது. எனினும், பாதாள குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கலென விமர்சித்துவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” குற்றவாளிகள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் வியாபாரிகள் ஆகியோரை கைது செய்த பின்னர் அவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெறுகின்றன. இது அரசியல் பழிவாங்கல் அல்ல. அவ்வாறு கூறி சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது. எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை இடம்பெறுகின்றது.

பாதாளக்குழுக்களை அண்டி இருந்த தரப்புகள்தான் தற்போது அஞ்சுகின்றன. பொலிஸாருக்கு தேவையான வளங்களையே அரசாங்கம் வழங்கிவருகின்றது. விசாரணைகளில் தலையிடவில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles