‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரணவுடன் இணைந்து டயலொக் நேசக்கரம்’

நெருக்கடியான காலங்களில் நாட்டை மேம்படுத்துவதற்கான அதன் மிக சமீபத்திய முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மீண்டும் டிவி தெரணவுடன் கைகோர்த்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக ‘டயலொக் உடன் மனுசத் தெரண’ முயற்சியினை தொடங்கியுள்ளது.

இந்த நாடு தழுவிய முயற்சி, நாட்டுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரிப்பதற்காக டயலொக் நடத்தி வரும் பல திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

மூன்று நாட்களில் டயலொக் மற்றும் தெரண குழுவினர் கம்பஹா, வத்தளை, கொழும்பு, கடுவேல, கொலோனாவை மற்றும் காலி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு சுத்தமான குடிநீர், உலர் உணவுகள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

இவை தவிர, நாட்டில் கோவிட் 19 க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கும் டயலொக் இணையான ஆதரவினை வழங்கி வருகிறது.

மனுசத்தெரணவுடனானடயலொக்கின் மூன்றாவது செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள 34 மருத்துவமனைகள் தங்களது அன்றாட நடவடிக்கைகளைத் மேற்கொள்வதற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் அதே சமயம் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்திரவுகள் பிரப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 44,532 இலங்கையர்களுக்கு உலர் ரேஷன் பொதிகளையும் வழங்கியது.

இதேபோல்,  நாட்டில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட முதல் இரண்டு சூழ்நிலைகளின் போது ‘டயலொக் உடன் மனுசத் தெரண’ முயற்சி 22 மாவட்டங்களில் 400 க்கும் அதிகளவான கிராமங்களில் 128,000 போருக்கும் சுமார் 6 வாரங்கள் சேகரிக்கப்பட்ட உலர் உணவு பொதிகளையும் இரண்டாவது முயற்சியின் போது 22 நாட்களில் 10 மாவட்டங்களில் உள்ள 46,000 மக்களுக்கும் உலர் உணவுகளை வழங்கியது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க அரசாங்க சுகாதார அதிகாரிகள் கட்டளையிட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படியே உலர் உணவுகளை கொள்வனவு செய்தல், பொதி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற முழு செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு பொறுப்பான நிறுவம் என்ற வகையில், டயலொக் ஆசிஆட்டா நாட்டில் கோவிட்-19 இன் முதல் அறிகுறிகளின் போது சிக்கலான சுகாதார உட்கட்டமைப்பின் மேம்பாட்டுக்காக 2000 இலட்சம் ரூபாய்க்கான உறுதி மொழியினை வழங்கியது. இந்த உறுதிமொழி, நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் 10 படுக்கைகளை கொண்ட முழுமையான செயல்பாட்டுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளை (ICU) நிர்மாணிக்க உதவியது மேலும் கோவிட்-19 தொற்றுநோயை ஒரு தேசமாக சமாளிப்பதற்கான கூட்டு முயற்சியை வலுப்படுத்தியது.

டயலொக் மற்றும் டி.வி. தெரண குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான பொதியிடல் பணியின்போது…..
கம்பஹா பிரதேச செயலகத்திடம், பொருட்கள் கையளிப்பு
வத்தளை பிரதேச செயலகத்திடம் அத்தியாவசியப் பொருட்கள் கையளிப்பு
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles