பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?

வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ளது. அதன் உள்ளடக்கம் பற்றி தெரியாது. எனினும், சம்பள உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். பாதீடு முன்வைக்கப்படும்வரை அது பற்றி உறுதியாக கூற முடியாது. இது பற்றி நிதி அமைச்சருக்குதான் தெரியும்.

அதேவேளை, புதிய அதிபர்களுக்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கிவைக்கப்படவுள்ளது எனவும்,
இதன்படி 4 ஆயிரத்து 715 அதிபர்கள் (அதிபர் தரம் III) நியமனம் பெறவுள்ளனர் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related Articles

Latest Articles