பாதீட்டு கூட்டத்தொடருக்கு ரூ. 20 கோடி செலவு!

வரவு – செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற காலப்பகுதியில் நாடாளுமன்ற கூட்டத்துக்காக சுமார் 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்ற  உறுப்பினர்கள், விருந்தினர், அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கவும், எரிபொருள், குடிநீர், மின்சாரம், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக இத்தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்ட விவாதம் 20 நாட்கள் நடைபெற்றுள்ளன. வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 8 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.

Related Articles

Latest Articles