இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர்
தென்னக்கோன் வரவேற்றதுடன், முக்கிய விடயங்கள் குறித்தும் சிநேகபூர்வமாக
கலந்துரையாடினார்.
நட்புரீதியான இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பரம்
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு
ஆலோசகர் கேர்ணல் டெரன் வூட்ஸ் அவர்களும் கலந்துகொண்டார்.










