பாராளுமன்ற தேர்தல் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்…..!

2024 மார்ச்சில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகிவருகின்றது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன்பின்னர் ஜனவரி 9 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளது.

ஜனவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியால் இடைநிறுத்தப்படவுள்ளது.

அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத வகையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாக வேண்டும். எனவே, மார்ச்சில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2024 தேர்தல் வருடம் என ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles