மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவிற்க்கு உரித்தான நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 200 மீட்டர் தேயிலை செடிகளில் உள்ள பாரிய மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாரிய வெட்டுக்கள் ஏற்பட்டு உள்ளதால் அந்த வீதியை உடன் அமுலாகும் வரையில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களின் பணிபுரையில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் அவர்களினால் இன்று மதியம் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இணைந்து வீதியை மூடியுள்ளனர் .

மேலும் அப் பகுதியில் உள்ள அனைத்து இளைஞர்கள் ஒன்றினைந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.அவ்வப்போது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வருகிறனர்.
மேலும் நாளை காலை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்கள் மற்றும் நில ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் வந்து நிலத்தை ஆய்வு செய்ய உள்ளதாக ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.
செ.தி.பெருமாள்
