கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு இலங்கை மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அச்சங்கத்தால் நிதி அமைச்சருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒன்லைன் ஊடான மது விற்பனை நடவடிக்கையும் நிறுத்தப்பட வேண்டும் என மேற்படி சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.