” மதுபானசாலைகளை திறப்பதற்கு யார் அனுமதி வழங்கினர் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான பொறுப்பை உரியவர்கள் ஏற்காவிட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
” மதுபானசாலைகள் அண்மையில் திறக்கப்பட்டபோது, இன்று மாத்திரம்தான் ‘பார்’கள் திறக்கப்படும் என எண்ணி சிலர் 10, 15 போத்தல்கள் கொள்வனவு செய்தனர். மது அருந்துபவர்களை, சட்டம்போட்டு கட்டுப்படுத்த முடியாது.

அதேபோல இது தலிபான்களின் நாடும் கிடையாது. எனவே, மதுபானசாலைகள் திறக்கப்பட்டதற்கு எவரும் பொறுப்பேற்காவிட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார். ” – என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
