பதுளையில் பால் கொள்கலன் ஒன்று, மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளை, கெப்பட்டிபொலயில் இருந்து பொரலந்த நோக்கி வந்துகொண்டிருந்த பால் கொள்கலன், பொரலந்த பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து வக்கி கும்புரா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த 23 வயதுடைய இளைஞன் இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
பால் கொள்கலன் சாரதி போககும்பரா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை போககும்புரா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










