‘பிக்பொஸ்’ வீட்டிலிருந்து விமல், கம்மன்பில ‘அவுட்’! உள்ளே வருகிறார் எஸ்.பி.! நடந்தது என்ன?

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளனர். இதன்படி இருவரும் வகிக்கும் அமைச்சு பதவிகள் மற்றவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

உதய கம்மன்பில வகிக்கும் வலுசக்தி அமைச்சு பதவி தற்போதைய மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் வழங்கப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சராக செயற்படும் பவித்ராதேவி வன்னியாராச்சி, மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.

விமல் வீரவன்ஸவின் கைத்தொழில் அமைச்சு பதவி, அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. அவர் வகிக்கும் கல்வி அமைச்சு பதவி எஸ்.பியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுமக நியமிக்கப்படவுள்ளார்.

அரச பங்காளிக்கட்சிகள் இணைந்து கொழும்பிலே நேற்று கூட்டமொன்றை நடத்தின. அரசை வழிநடத்தும் விதத்திலான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் நிதி அமைச்சர் பஸிலை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் பஸில் தரப்பு கடுப்பானது. இவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதியால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles