பியகமை ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு அனுசரணை வழங்கிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCEஇன் அனுசரணையுடன் சமூக பொலிஸ் பிரிவு மற்றும் பியகம பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி பியகம ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள DPL நிறுவன வளாகத்தில் வெற்றிகரமாக கொண்டாடியது.

சமூக பொலிஸ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பியகம ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்திலுள்ள தொழிற்சாலைகளின் 350இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு மகளிர் தினமானது “பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பின் சட்டப் பாதுகாப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்விற்கு மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர நடாத்தியதுடன், பணிபுரியும் சூழலிலும் அதற்கு அப்பாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு எதிராக அவர்களுக்கு எவ்வாறு சட்டப் பாதுகாப்பு வழங்குவது, அவர்கள் மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பங்குகொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HNB FINANCEஆல் அனுசரணை வழங்கப்பட்ட இந்த நிகழ்விற்கு பங்குபற்றியவர்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தின நிகழ்விற்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த HNB FINANCE PLCஇன் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “சட்ட விதிகளை அறிந்துகொள்வதன் மூலம் பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களை சமாளிக்க முடியும்.

HNB FINANCE பெண்களின் நிதி மற்றும் சமூக ரீதியில் அதிகாரமளித்ததை பாராட்டுகிறது, மேலும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த அனைத்து வழிகளிலும் செயல்படும் ஒரு நிறுவனமாக உள்ளதுடன் இதுபோன்ற CSR திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம் பெண்கள் சமூகத்தை மேம்படுத்தும் HNB FINANCEஇன் சமூகப் பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.” என தெரிவித்தார்.

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளும், HNB FINANCE PLC மற்றும் கடுவெல கிளையின் தலைமை அலுவலக அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

HNB Finance தொடர்பில்

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும்.

70 கிளைகளைக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles