பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த ரக்னா லங்கா நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் கடந்த காலங்களில் பல விமர்சனங்களை சந்தித்திருந்தன
தற்போது முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா செயற்படுகின்றார்.
இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த Selendiva Investments நிறுவனமும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
