113 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் கிடைக்குமாக இருந்தால் நிச்சயமாக பிரதமர் பதவியை ஏற்க தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாம் எடுக்கும் எந்த முடிவும் மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும். மக்கள் வாழும் உரிமையை கோருகின்றனர். அந்த சவாலை ஏற்க நாம் தயார். முழுமையான மாற்றம் வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
பாதிமாற்றம் செய்து சரியாக நாட்டுக்காக
சேவையாற்ற முடியாவிடின் மக்கள் சஜித் கோஹோம் என்பார்கள். நான் தோல்வி எனின் அவ்வாறு கோசம் எழுப்புவதில் பிரச்சினை கிடையாது. கையையும் காலையும் கட்டிப் போட்டு ஆட்சியை செய்து அதன் அடிப்படையில் கோஹோம் என்று சொல்லும் நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆதரவு வழங்கிவிட்டு ரஞ்சித் சியம்பலாபிடிய விலகியது போன்ற நிலைமை வரக்கூடாது என்றும் அவர் கூறினார். 113 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் கிடைக்குமாக இருந்தால் நிச்சயமாக பிரதமர் பதவியை ஏற்க தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
