” பிரதமர் பதவியை வழங்குமாறு இந்த அரசிடம் நான் கோரிக்கை விடுக்கவில்லை. தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறே வலியுறுத்தியுள்ளேன்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு எனக்கு எவரும் அழைப்பு விடுக்கவில்லை. நானும் அப்பதவியை கேட்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தேசிய வேலைத்திட்டமொன்றே அவசியம். அதன்மூலம் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும்.
இனவாதம் பேசும் அரசியல் இனியும் வேண்டாம், அந்த அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும்.” – என்றார்.