இலங்கையின் பிரபல பாடகரும் ஜிப்சிஸ் குழுவின் தலைவருமான சுனில் பெரேரா இன்று காலமானார்.
நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையின் அதி தீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் காலமானார்.
கடந்த மாதம், பெரேராவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தது.
எனினும் சிகிச்சையின் பின்னர் அவர், மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்த நிலையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பாடல்களை சுனில பெரேரா பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.