பிரவுன்லோ தோட்ட வீதி எப்போது புனரமைக்கப்படும்?

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

மேற்படி தோட்டத்தில் 49 குடியிருப்புகள் காணப்படுகின்றன. 130 இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் இவ்வீதியையே பயன்படுத்திவருகின்றனர்.

இவ்வீதி புனரமைக்கப்படாமையால்  மழைக் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கும் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இப்பாதையை பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். எனினும், புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என் மக்கள் தெரிவிக்கின்றனர்.

”  நகரத்திற்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து, திரும்பும் போது ஆட்டோவோன்றை வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் 500 ரூபாவுக்கு மேல் செலுத்தவேண்டியுள்ளது.  எனவே, வீதியை புனரமைத்து தருமாறு கோருகின்றோம்.” – எனவும் குறிப்பிட்டனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles