பிரிட்டனின் தடை குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

” ஈழம் கனவை நனவாக்குவதற்குரிய வேலைத்திட்டம் இடம்பெற்றாலும் இது விடயத்தில் கண்டும், காணாததுபோலவே அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது. தேர்தல் காலத்தில் டயஸ்போராக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பிரிட்டனின் தடை தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” எமது நாட்டில் தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் பிரிவினைவாதம் ஒழிக்கப்படவில்லை.
புலிகளுக்கு பின்னால் உள்ள டயஸ்போராக்கள், உலகில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கங்களை மாற்றுவதற்குரிய ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர்.

இதற்கமையவே ஈழம் கனவை நனவாக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை நாம் ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக்காட்டிவருகின்றோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் கண்டும், காணாததுபோல் செயல்படுகின்றது. அவ்வாறு அல்லாவிட்டால் தேர்தல் காலத்தில் டயஸ்போராக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

பிரிட்டனின் தடை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். நாட்டுக்காகவே படையினர் போரிட்டனர். மஹிந்த ராஜபக்ச அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தீர்மானத்தை எடுத்தது. அதனையே படை அதிகாரிகள் செயல்படுத்தினர்.

இவர்களில் தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகளை இலக்கு வைத்து போர்க்குற்றச்சாட்டை சுமத்தவதற்கு முற்படுகின்றனர்.
புலிகளுக்கும், இலங்கையர்களுக்கும்தான் பிரச்சினை இருந்தது. ஆனால் இதனை தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்றுவதற்கு டயஸ்போராக்களிடம் பணம் பெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்;. இராணுவத்துக்காக முன்னிலையாவோம். இராணுவத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கமும் அணிதிரள வேண்டும்.போர் முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அன்று எடுத்த முடிவு சரியானதே.” – என்றார்.

Related Articles

Latest Articles