” புலிகளுக்கு எதிராகவே போர் தொடுத்தோம். மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராக பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.
போரின்போது மனித உரிமைகள் மீறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியதுடன், பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவை எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
தமது அரசாங்கம் சமாதானத்தையே விரும்பியதாகவும், புலிகளின் உக்கிர தாக்குதல்களால்தான் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க நேரிட்டது எனவும் மஹிந்த ராஜபக்ச கூறினார்.
