பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் அதில் பயணித்த 61 பேரும் பலியாகியுள்ளனர்.
இரட்டை இயந்திரத்தைக் கொண்ட ஏ.டி.ஆர் 72-500 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாவ்லோ நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் 57 பயணிகளும் நான்கு பணியாளர்களும் பயணித்துள்ளனர்.