பிரேரணைவர முன் பதவி விலகுவாரா தேசபந்து தென்னகோன்?

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தாலும், அத்தகையதொரு முடிவை அவர் எடுக்கப்போவதில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுகோரி ஆளுங்கட்சி உறுப்பினர்களால் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக குழு நியமிக்க வேண்டும் என்ற யோசனை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
அதன்பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் மேற்படி பிரேரணை விவாதத்துக்கு வருவதற்கு முன்னதாக தேசபந்து தென்னகோன் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், அந்த தகவலை தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

Related Articles

Latest Articles