பிறந்த நாள் அன்று உயிரிழந்த ஏழு வயது சிறுமி – கொழும்பில் பெரும் சோகம்! வெல்லம்பிட்டிய பாடசாலையில் நடந்தது என்ன?

கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்ரீட் மதிலொன்று இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

தரம் ஒன்று மாணவர்கள் கல்வி கற்கும் கட்டத்துக்கு அருகாமையிலேயே, இடைவேளை நேரத்தின்போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆறு மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஏழு வயதான செயன்சா நெத்சரணி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்.

தாய் வெளிநாட்டில் இருக்கின்றார். பாட்டி மற்றும் தாயின் சகோதரியின் பராமரிப்பிலேயே வளர்ந்துள்ளார்.

காயமடைந்த இரு மாணவர்களும், மூன்று மாணவிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

உயிரிழந்த மாணவியின் ஏழாவது பிறந்தநாள் இன்றாகும்.

Related Articles

Latest Articles