பிள்ளையானும் ரணிலிடம் சரண்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருக்கின்றார் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் அரசுடனேயே இணைந்திருப்பதாகவும் தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சுப் பதவியை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles