ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டரீதியானவை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” பொதுச்சபை கூட்டம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சியின் தவிசாளராக இருந்த பீரிசுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. உரிய நடைமுறைகளை பின்பற்றியே கூட்டம் நடத்தப்பட்டது.” – எனவும் அவர் கூறினார்.
மொட்டு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தின்போது புதிய தவிசாளர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல என பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலுயே மொட்டு கட்சி இவ்வாறு அறிவித்துள்ளது.
