புகையிரத திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

களனிவெளி புகையிரத பாதையின் ஒரு பகுதி திருத்த வேலை காரணமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொஸ்கம முதல் அவிசாவளை வரையான பகுதி மூடப்படவுள்ளது.

எதிர்வரும் 7ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 10ஆம் தேதி காலை 6.00 மணி வரை அந்த பகுதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது களனிவெளி மார்க்கத்தில் கொஸ்கம வரை மாத்திரம் புகையிரதம் இயக்கப்படும்.

கொஸ்கம மற்றும் அவிசாவளை புகையிரத பிரிவின் பாலம் திருத்த வேலைகள் காரணமாக புகையிரத பாதை மூடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles