கண்டி, கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியிலிருந்து 2022 – புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 94 மாணவர்களுள் 11 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். அத்துடன், 59 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மாணவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு எல்லா வழிகளிலும் பக்கம் பலமாக இருந்த கல்லூரியின் அதிபர் ஜி. லோகேஸ்வரனுக்கும், மாணவர்களை உரிய வகையில் தயார்படுத்தி, நெறிப்படுத்திய வகுப்பாசிரியர்களான எஸ். அரியரட்ணம், திருமதி ஏ. கனிமொழி ஆகியோருக்கும்,
பாடசாலையின் முன்னாள் அதிருபர் எஸ். ரவிச்சந்திரன் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுஎப்பினர்கள் உள்ளிட்டோர் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு 91 சதவீத சித்தியை பெற்றுதந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறு பெற்றுக்கொண்ட மாணவர்களின் விபரம் வருமாறு,
1. ஆர். பிரஷாயுதன் – 161
2. ஏ. ஜதுர்ஷிக்கா – 160
3. எம். தாரிக்கா – 156
4. பி. மெலிஷா – 155
5. ஜே. விதுர்ஷன் – 154
6. யூ. கீதன் – 153
7. எஸ். ஹோம்ஷிகா – 149
8. எஸ். லிதுர்ஷன் – 149
9. ஜி. நேஹன் – 147
10. எம். கியோசி – 147
11. ஆர். ஷாகித்யன்
