புசல்லாவை, பாரதெக்க பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

புசல்லாவை, பாரதெக்க பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளது.

 

பாரதெக்க, சப்ளி கிராமத்தை சேர்ந்த 62 வயதுடைய ரத்னாயக்க முதியான்சலாகே சிறிபால என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று புசல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பாரதெக்க பகுதியில் பராமரிப்பு இன்றி – கைவிடப்பட்டுள்ள ஆயுதவேத சிகிச்சை நிலையமொன்றுக்குள் சடலம் இருப்பதை கண்டு, அது தொடர்பில் பிரதேச மக்கள் புசல்லாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். ஸ்தல மேற்பார்வை, மரண பரிசோதனை முடிவடைந்த பின்னர் சடலம் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles