புதிய அமைச்சரவையில் உள்ள 10 பேர் குறித்த வெளியான பரபரப்பு தகவல்

புதிய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 17 பேரில், 10 பேர் முன்னாள் அமைச்சர்களின் இரத்த உறவுகள் என திவயின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் – இந்நாள் அரசியல்வாதிகளின் புதல்வர்களும் , சகோதரர்களுமே இவ்வாறு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன (பிலிப் குணவர்தனவின் புதல்வர்),

அமைச்சர் ரமேஷ் பத்திரண (ரிச்சர்ட் பத்திரணவின் புதல்வர்),

அமைச்சர் பிரசண்ண ரணதுங்க (ரெஜி ரணதுங்கவின் புதல்வர்),

அமைச்சர் திலும் அமுனுகம (சரத் அமுனுகமவின் உறவினர்),

அமைச்சர் கனக ஹேரத் (மஹிபால ஹேரத்தின் புதல்வர்),

ஷெஹான் சேமசிங்க (எச்.பி.சேமசிங்கவின் புதல்வர்),

காஞ்சன விஜேசேகர (மஹிந்த விஜேசேகரவின் புதல்வர்)

விதுர விக்ரமநாயக்க ( முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர்),

பிரமித்த பண்டார தென்னக்கோன் (ஜனக பண்டார தென்னக்கோனின் புதல்வர்),

தெனுக விதானகமகே (அனுர விதானகமகவின் சகோதரர்)

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், டி.ஏ.ராஜபக்சவின் புதல்வர்களாவர்.

அதேவேளை, தற்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுள் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles