புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை செயற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன எனவும், இவ்வருடத்துக்குள் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை இடம்பெறும் எனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை செயற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை நிறைவுசெய்துள்ளோம். கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பயோமெற்றிக் தரவு சேகரிப்பு பணி ஜுன் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பிரதேச செயலகங்கள் ஊடாக இதற்கான நடவடிக்கை இடம்பெறும். இவ்வருடத்துக்குள் திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, நுவரெலியாவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும்.

இதன்படி ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவையும் அங்கு வழங்கப்படும்.

அத்துடன், வடமேல் மாகாணத்துக்கான அலுவலகம் குருணாகலில் செயற்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles