தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டினை நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு தலா ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாப்படி மூன்று இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தினை அபராதமாக செலுத்துமாறு நொச்சியாகம நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நொச்சியாகம காலதிவுள்வெவ பகுதியிலுள்ள விகாரையொன்றின் பிக்கு ஒருவருக்கும் கண்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குமே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலதிவுள்வெவ பஹமுனேகம பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் சட்டவிரோதமான முறையில் உட்புகுந்து புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் காலதிவுள்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தபோது மீண்டும் கடந்த 26 ஆம் திகதி நொச்சியாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இருவருக்கும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.