யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்புப் பகுதியில் புத்தபெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட மிதப்பை ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு பொருள்கள் மற்றும் இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்பைகள் கரை
ஒதுங்கி வருகின்றன.
இதுவரை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று, பௌத்த கொடியுடன் கூடிய மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தன.
நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்று கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
நேற்று கரையொதுங்கிய குறித்த தெப்பத்தில் மலையாள எழுத்து காணப்படுவதால் இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.










