புத்தாண்டுக்குள் அமைச்சரவை மாற்றம்! எஸ்.பிக்கு உயர் கல்வி அமைச்சு?

தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அமைச்சரவை முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், சில அமைச்சுகளின் விடயதானங்களும் கைமாறவுள்ளன.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு உயர் கல்வி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதுடன், வஜிர அபேவர்தனவுக்கும் முக்கிய அமைச்சு பதவியொன்று கையளிக்கப்படவுள்ளது.

ரோகித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் கிடைக்கப்பெற்ற பின்னரே, அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles