அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், ‘புத்தி இல்லாதவர் உடன் பேசத் தயாராக இல்லை’ என மஸ்க்கை குறிப்பிட்டு ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதை ஊடக நிறுவனம் ஒன்றுடனான தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் குறித்து இந்த நேர்காணலில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப்,
“அந்த புத்தி இல்லாத மனிதர் குறித்து சொல்கிறீர்களா. அவருடன் பேச எனக்கு அறவே ஆர்வமில்லை. மஸ்க் தான் என்னுடன் பேச விரும்புகிறார். ஆனால், நான் தயாராக இல்லை” என டொனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.இதற்கிடையே ட்ரம்ப் மற்றும் மஸ்க் தங்கள் பகையை முறித்துக் கொண்டு சுமுகமாக வேண்டும் என குடியரசு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மக்கள் கருத்தை எக்ஸ் தளத்தில் மஸ்க் நேற்று கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.