புலனாய்வாளர்கள் களமிறக்கம்!

அதிகளவான இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அறுகம்பே பகுதிக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ இஸ்ரேல் பிரஜைகளால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடமொன்று அறுகம்பே பகுதியில் உள்ளது. பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளானவை இஸ்ரேலியர்களை அதிகம் கவர்ந்துள்ள பகுதியாகும்.

அறுகம்பே பகுதிக்கு வரும் இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

நபர்கள் சோதனை, வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்ககளை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எமக்கு ஏதேனும் புலனாய்வு தகவல் கிடைத்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அறுகம்பே பகுதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்கா பயண எச்சரிக்கையை விடுத்திருக்கக்கூடும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles