புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவர்கள் 198 புள்ளிகள்!

2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 32 ஆயிரத்து 949 மாணவர்களுள் 50 ஆயிரத்து 664 பேர் வெட்டுபுள்ளிக்குமேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர் – என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் நேற்று தகவல் வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” 2023 ஒக்டோபர் 15 ஆம் திகதிதான் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. நவம்பர் 16 ஆம் திகதி ஆகும்போது பெறுபேறுகளை வெளியிட முடிந்தது. சவால்களுக்கு மத்தியிலும் ஒரு மாத காலத்துக்குள் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளோம். பரீட்சைகள் திணைக்களம், ஆசிரியர்கள் மற்றும் இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன், 2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 32 ஆயிரத்து 949 மாணவர்களுள் 50 ஆயிரத்து 664 பேர் வெட்டுபுள்ளிக்குமேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். கடந்த வருடத்தைவிடவும் சித்தி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பரீட்சையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுள் முதல் ஐந்து இடங்களுக்கு தேர்வானவர்கள் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 197 புள்ளிகளைப் பெற்ற நால்வர் இருக்கின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles