புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வெளியாகும்?

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15) இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் 2849 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles