பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில் மக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு, நையப்படைக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை நகர் பகுதியிலேயே நேற்றுமாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முற்பட்ட நபர், மக்களிடம் பிடிபட்டுள்ளார். மக்களும் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காயம் அடைந்திருந்த அவர் பொலிஸாரால் நேற்று இரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பிங்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மக்களின் கடுமையாக தாக்கியதால் இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.










