பென்குயின்கள் வாழும் தீவுகளுக்கும் வரி: நகைச்சுவையாக மாறியுள்ள ட்ரம்பின் உத்தரவு

அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார்.

இதுதொடர்பான நகைச்சுவை ‘மீம்ஸ்கள்” சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதன்படி 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை ட்ரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த பட்டியலில் அன்டார்டிகாவில் உள்ள ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் ஆகிய 2 தீவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த தீவுகளில் பென்குயின் பறவைகள் மட்டுமே வாழ்கின்றன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே 4000 கிலோமீற்றர் தொலைவில் இத்தீவுகள் அமைந்துள்ளன.

பேர்த்திலிருந்து படகு மூலம் மாத்திரம் இங்கு செல்ல முடியும். ஏழு நாள் பயணம்,இதனை விட முக்கியமாக கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக மனிதர்கள் அங்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ வைரலாக பரவி வருகின்றன.

கனடாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் 10 சதவீத வரி விதிப்பால் பென்குயின்கள் கண் கலங்கி நிற்கின்றன. ஜனாதிபதியிடம் நேரடியாக நியாயம் கேட்கின்றன. எங்கள் மீதான வரிவிதிப்பை ரத்து செய்யுங்கள் என்று ட்ரம்பிடம் பென்குயின்கள் மன்றாடுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல ஏராளமான நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் நிறைந்துள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles