“பெருந்தோட்ட தொழிற்சங்க முரண்பாடுகளில் தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது”

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்துக்கும் இடையில் ஏற்படும் பல்வேறு தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது என அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஒரு தரப்பினரால் பொலிஸில் எதாவது முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போது பொலிஸார் தலையிடாமல் இருக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இங்கு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிப்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு வினவியது. அவ்வாறு கௌரவிப்பதற்கு தற்பொழுது வேலைத்திட்டமொன்று காணப்படுவதாகவும், சோதனைகள் தொடர்பான விடயங்களைக் கருத்திற் கொண்டு அந்தந்த அதிகாரிகள் கௌரவிக்கப்படுவதாகவும் குழுவிற்கு வருகை தந்திருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமதுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு பயன்படுத்தப்படாமை தொடர்பில் இதன்போது வினவப்பட்டது. தற்பொழுது அந்த வீட்டைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், கிராம மட்டத்தில் போதைப்பொருள் பாவனை, பரவல் மற்றும் அடிமையானவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் குழு வினவிய போது, போதைப்பொருள் தொடர்பான விசாரணை பொலிஸாருக்கு கிடைக்கும் பட்சத்தில் முன்பு போன்றில்லாமல், சட்டத்துக்கு முரணாக வைத்திருத்தல் மற்றும் பணம் தூய்தாக்கல் தொடர்பிலும் விசாரணை செய்யப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாரால் வீடியோ ஒளிப்பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்குவதன் நெறிமுறை பற்றிக் குழு கவனம் செலுத்தியது. எந்தவொரு குற்றவாளியினதும் தனிப்பட்ட விடயங்களுக்கு பொலிஸார் கௌரவமளிக்க வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக ஏற்றுக்கொண்ட பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, இது தொடர்பில் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஷாந்த பண்டார, விஜித பேருகொட, அரவிந் குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான அகில எல்லாவல, கௌரவ வீரசுமன வீரசிங்க, சஹன் பிரதீப் விதான, சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், மதுர விதானகே, வேலு குமார், (கலாநிதி) வி. இராதாகிருஷ்ணன், உபுல் மஹேந்திர ராஜபக்ச, மஹிந்தானந்த அலுத்கமகே, யு.கே. சுமித் உடுகும்புர, சஞ்சீவ எதிரிமான்ன, ரஞ்சித் மத்துமபண்டார, ராஜிகா விக்ரமசிங்க மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles