பெருந்தோட்ட பாடசாலைகளில் கழிவறைகள் அமைப்பதற்கு காசோலை வழங்கிவைப்பு

இதொகாவின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்ட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரனால் பெருந்தோட்ட பாடசாலைகளில் கழிவறைகள் அமைப்பதற்கான விசேட வேலை திட்டத்தின் கீழ் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு காசோலைகள் நேற்று (20) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மத்திய மகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் ,தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கீர்த்தி குணரத்ன, நீர் வளங்கள் அமைச்சின் உதவி அபிவிருத்தி இயக்குனர் திருமதி சச்சிந்து நிஷா பானகல , பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் முறையே அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கெனில் வேர்த் இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000, ஹெனண்டேல் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 450,000, மின்னா தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000, சென்மேரிஸ் தேசிய கல்லூரிக்கு ரூபா 300,000 வழங்கப்பட்டன. மேலும் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000, ஆட்லோ தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000,வங்கி ஓயா இல 01 தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 150,000, சென் என்தனிஸ் கல்லூரிக்கு ரூபா 300,000 வழங்கப்பட்டன.வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான அல்மா சீட்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 150,000, அல்மா கிரெமொண்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000 வழங்கப்பட்டன.

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ரூபா 300,000, ரஸ்புரூக் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000 வழங்கப்பட்டன.

ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான பிரின்ஸஸ் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 150,000 வழங்கப்பட்டன.

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான டெல்டா ஈஸ்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000, விக்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 300,000,ஸ்டெல்லர்ன்பர்க் தமிழ் வித்தியாலயத்திற்கு ரூபா 450,000 பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

தலவாக்கலை பி.கேதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles