‘பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை’ – அரச ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம்…!

2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவும் 2500 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவல்களை வெளியிட்டார்.

” அரச துறையின் மாதாந்த சம்பளத்துக்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசு ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுகின்றது.” – எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை. இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மலையக கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளுக்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles