பெருந்தோட்ட மக்களுக்கு இனியும் மாற்றாந்தாய் கவனிப்பு வேண்டாம் – சபையில் உருகிய சஜித்

மாத்தளை எல்கடுவ தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை வருமாறு

மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் ரத்வத்தை கீழ் பகுதியில் வசித்து வந்த தோட்ட சமூகத்தை சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த அப்பாவி மக்கள் 14 பேர் தோட்டத் துறையில் உள்ள தோட்ட உதவி முகாமையாளரால் தனது கொடூரமான சகாக்கள் சிலருடன் சேர்ந்து வெளியேற்றப்பட்டனர்.அவர்கள் தற்காலிகமாக கட்ட அனுமதித்த வீடுகள் இடிக்கப்பட்டன.இது தவறான செயல். இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இது ஒரு அரச தோட்டத்தில் நடந்த சம்பவமாகும்.. இதற்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர் அங்கு சென்று போலியான பாசாங்கு செய்வதில் பயனில்லை. இந்த அரசாங்கம் பெருந்தோட்ட சமூகத்தின் மீது காட்டும் அக்கறை இந்த நடவடிக்கையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எத்தனை பேர் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் சென்று அரசுக்கு உதவி செய்தாலும் தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.. தெளிவாக, இந்த தோட்ட மக்களை பயமுறுத்தி, அவர்களின் வீடுகளை சேதப்படுத்திய அதிகாரிகள் மட்டுமல்ல, அதற்குப் பொறுப்பான அமைச்சரும் இந்த சபையில் பதில் சொல்ல வேண்டும்.

சபாநாயகர் வசிக்கும் பிரதேசத்திலும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்ட சமூகத்தின் வியர்வை, கண்ணீர் மற்றும் கடின உழைப்பினால் எமது நாட்டுக்கு டொலர்கள் கிடைக்கின்றன.நாங்கள் அவர்களை கவனிப்பது கிடையாது.. அவர்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட பல பிரச்சினைகள் உள்ளன. இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சபைக்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

அவருக்கு கீழ் உள்ள அரச தோட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூரத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இவர்கள் இப்போது பொய்க் கூச்சல் போடுகிறார்கள்.தோட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்..

பெருந்தோட்ட சமூகம் இந்நாட்டின் பிரஜைகளாக செயற்பட்டு அந்நிய செலாவணியைப் பெற்று கொடுக்க ஆரம்பித்து இந்த வருடத்துடன் 200 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இந்த மலையக பெருந்தோட்ட சமூகம் எல்லா வகையிலும் மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வருகின்றனர்.தோட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத காரணத்தினால்.

இந்த மக்கள் பிரதிநிதிகள் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.அமைச்சர் ஆராய்ந்து பார்த்ததாக சொன்னாலும்,கடமையும், பொறுப்பும் நிறைவேற்றப்படவில்லை. எப்போது இதற்கு சரியான. சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.?

Related Articles

Latest Articles