பெருந்தோட்ட மக்கள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு தோட்ட நிர்வாகத்தின் ‘தலையீட்டை’ நீக்கவும்!

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் பிரதீப் சபுதந்திரிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது தோட்ட முகாமைத்துவத்தின் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்த ஆவணத்தை தோட்ட நிர்வாகத்திடம் பெறுவதற்கு பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவது தொடர்பில் இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவர் எஸ்.ரூபதர்ஷனிடம் இளைஞர்கள் பலர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் இளைஞர் அணி தலைவர் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து ஏனைய சமூகங்களுக்குபோல், விதிவிடத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையும் கிராம சேவகர்கள் ஊடாக முன்னெடுக்குமாறு கோரி, இது விடயத்தில் தோட்ட நிர்வாக தரப்பிடம் இருந்து ஆவணங்கள் எதுவும் பெறப்படாத வகையில் பொறிமுறையை உருவாக்குமாறு கோரி ஆட்பதிவு திணைக்கள ஆணையாளருக்கு அமைச்சரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles