பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவை?

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 31 ஆவது பொதுக்கூட்டம் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் , சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, பெருந்தோட்டகைத்தொழில் அமைச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடியது.

இக்கூட்டத்தில் கடந்த வருடத்திற்கான பொதுக் கூட்டத்தின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் கணக்காளர் அறிக்கையும் வரவுசெலவு அறிக்கையும் ஏக மனதாக உறுப்பினர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப் பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி ,

“ அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தூர நோக்கான திட்டங்களுக்கு அமைவாக பெருந்தோட்டத்துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். கடந்த காலங்களில் நலன்புரி விடயங்களில் மாத்திரம் அளப்பரிய சேவையாற்றிய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், தற்போது எமது மக்களின் உரிமை சார்ந்த மற்றும் அடையாளத்தைப் பேணக்கூடிய மற்றும் அவர்களை சமூக ரீதியில் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தக்கூடிய கொள்கைகளை அமைக்கும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறோம்.” – என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை குடிநீர் திட்டங்களாக 3546 திட்டங்களும், சுகாதார திட்டங்களாக 135,015 திட்டங்களும் உட்கட்டமைப்பு வசதிகளாக 1400 கிலோமீட்டர் பாதை வசதிகளும், லைன் அறைகளை சீர் செய்தல் திட்டத்தினூடாக 116,009 திட்டங்களும், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களாக 1419 நிலையங்களும், பல்வேறு காலப்பகுதிகளில் 65469 வீடமைப்பு திட்டங்களும். உள்ளடங்களாக. 18,300 மில்லியனுக்கு அதிகமான. நிதி ஒதுக்கீடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த அரசாங்கத்தினால் வெவ்வேறு கட்டங்களில் கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தையுமே அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அதிகளவான நிதி ஒதுக்கீட்டுனுடன் அரச சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு வீட்டுத்திட்டங்களை பூர்ணபடுத்த ஆலோசனை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் 600 இற்கு அதிகமான கைவிடப்பட்ட வீடுகளை நாம் பூர்த்தி செய்து தற்போது மக்கள் பாவனைக்கு வழங்கி வைத்து வருகிறோம்.
2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 2000 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் நாம் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் 1700 அதிகமான நிதி ஒதுக்கீட்டில் வீட்டு திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், கூரைகளை சீர்செய்தல். சுகாதாரம், பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல் . மற்றும் போசாக்கு மட்டங்களை அதிகரித்தல், சிறுவர் அபிவிருத்தி போன்ற பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

465 மில்லியன் செலவில் 297 வீடுகளையும் நாம் பூரணப்படுத்தி உள்ளதுடன் 12 வீடமைப்பு திட்டங்களுக்கான குடிநீர்திட்டங்களும் 17 மின் இணைப்பு திட்டங்களும் எமது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கியுள்ளோம்.

பெருந்தோட்ட கம்பனிகளின் பங்களிப்பு மற்றும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மற்றும் சிவில் அமைப்புக்கள் நிதி பங்களிப்புடன் பொது சுகாதார வசதி, குடிநீர் திட்டங்கள், நீர்வளபாதுகாப்பு, மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டங்களையும் நாம் முன்கொண்டுசென்றுள்ளோம் .

அதுமாத்திரமன்றி 2760 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளதுடன் மேலும் 356 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 09 திட்டங்கள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டில் பூரணப்படுத்தவும் உள்ளோம்.

மேலும், நுவரெலியாவில் மக்கள் இலகுவாக குடிநீரை பரிசோதனை செய்யக்கூடிய ஆய்வகத்தையும் நாம் நிறுவியுள்ளோம். அதுமாத்திரமன்றி சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியோடு நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் 31.4 மில்லியன் பெறுமதியிலான திட்டங்களை நாம் முன்கொண்டு சென்று வருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி 2023 ஆம் ஆண்டு நாம் சுகாதாரம் மற்றும் போசாக்கு மட்டத்தை முன்னிலைப்படுத்தி பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை முன் கொண்டு சென்றோம் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக சுகாதாரத் துறை மற்றும் மக்களின் போசாக்கு மட்டம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்பது நாம் அறிந்ததே.

எனவே, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் சுகாதாரத்துறையை மேம்படுத்த சுகாதார அமைச்சுடன் இணைந்து நாம் 18926பேர் பயன் அடையும் விதத்தில் 307பரிசோதனைகளை நாம் முன்னெடுத்துள்ளதுடன் இலவச கண்சிகிச்சை, பெண்களுக்கான விசேட பரிசோதனைகள் மற்றும் கிளினிக்குகள், காச நோய் மற்றும் வாய்வழி சுகாதார பாதுகாப்பு தொடர்பான விசேட பரிசோதனைகள் மற்றும் மருத்துவ உதவிகளை போன்றவியா இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அதுமாத்திரமன்றி பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் தகவல்களுக்கு அமைவாக 2022ஆம் ஆண்டு 7120 குழந்தை பிறப்புகள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 99 வீதமானவை சுகாதார நிலையங்களில்லேயே நிகழ்துள்ளன.

7088 சுகப்பிரசவங்களும், 978 நிறை குறைந்த பிரசவங்களும்மாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 2023ஆம் ஆண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விசேட வேலைத்திட்டங்களை நாம் சுகாதார அமைச்சு மற்றும் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு அமைச்சு, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியோடு நாம் மேற்கொண்டிருந்தோம்.

அதுமாத்திரமன்றி 931 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் சிறுவர்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கான தரவு அறிக்கையும், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி பட்டறைகளையும் நாம் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் வழிகாட்டலில் செய்து வருகிறோம்.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதி செயலகத்தின் விசேட அலகின் ஊடாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் நிலையங்களை உருவாக்குவதிலும் நாம் பங்களிப்பு செய்து வருகிறோம். அமைச்சர் அவர்களின் வழிகாட்டலில் தற்போது 50 ஓய்வறைகளை தேயிலை தோட்டப் பகுதியில் நாம் அமைத்துள்ளோம். இதன் மூலமாக அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதை நாம் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.

மேலும், உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் வேலை நேர பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக முதலுதவி மற்றும் அவர்களுக்கு தேவையான வேலை நேர பாதுகாப்பு தொடர்பான விசேட செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை பெருந்தோட்ட முகாமைத்துவத்தினால் முன்கொண்டு செல்லவும் அறிமுகப்படுத்தவும் நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதுமாத்திரமன்றி ஏற்கனவே குறிப்பிட்டது போன்று உலக வங்கியின் நிதி உதவியுடன் சிறுவர் அபிவிருத்தியை முன்னிலைபடுத்தி 2023ஆம் ஆண்டு 19 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை புதிதாக நிறுவி அமைச்சர் தலைமையில் மக்களின் பாவனைக்காக கையளித்தோம் . 347 மில்லியன்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.

விசேட வேலைத்திட்டமாக நாள் ஒன்றிற்கு 21000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு. இலவச காலை நேர சத்துணவு திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். 364 தோட்டங்களில் 571 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களினூடாக சிறுவர்களுக்கு நாம் தொடர்ந்து உணவு வேளைகளை வழங்கி வைத்தோம். 40 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட இவ்வேலைத்திட்டம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சுமற்றும் உலக வங்கியின் நிதி ஒதுக்கீடோடு வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறரை தங்கி வாழாது சுயமரியாதையோடு நவீன தொழிநுட்ப உதவியோடு தற்சார்பு பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் நோக்கில் தோட்ட வீடமைப்புகூட்டுறவுகளினூடாக மக்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை 419 க்கு கூட்டுறவுகளினூடாக முன்னெடுத்து வருகிறோம். பொருளாதாரம், இளைஞர்களுக்கான பொருளாதார மற்றும், கல்வி அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி மற்றும் வீடுகளில் பொருளாதார முகாமைத்துவதை மேம்படுத்துதல் மற்றும் கணக்கு வழக்குகளை பேணுதல் வீட்டில் உள்ள வரவு செலவு திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற அத்தியாவசிய பொருளாதார செயல்பாடுகளை நாம் வீடுதோறும் கொண்டு சேர்த்து வருகிறோம். அதுமாத்திரமன்றி.

மக்களின் பாதுகாப்புக்காக மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலுடன். ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்தோடு கை கோர்த்து ஜீவன சக்தி என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அதோடு தனியார் நிறுவனங்களோடும் நம் கைகோர்த்து சத்தூட்டப்பட்ட கோதுமை மாவினையும் அறிமுகம் செய்தோம். சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மக்களின் வல்வினை மேம்படுத்தும் பல திட்டங்களை செய்துவருகின்றோம்.

தற்போது, பாரத அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாரத்- லங்கா 10,000 வீடுகளை அமைக்க 10 பேர்சஸ் காணியை உறுதி செய்ததுடன், பல்வேறு காலகட்டங்களில் பேசு பொருளாக காணப்பட்டவந்த மக்களுக்கான நிரந்தர விலாசம், அவர்களுக்கான அடையாளதை வழங்கி உள்ளோம். மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிமுகப்படுத்தியுள்ள சௌமிய பூமி நில உரிமை வேலைத்திட்டத்தினூடாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்கவும் நாம் வழங்க துரிதகதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனவே கடந்த காலங்களில் வெறுமனே பேசு பொருளாக இருந்த பல விடயங்களை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக நான் பொறுப்பு ஏற்று அனைவரது வழிகாட்டலோடும் உதவியோடும் எமது மக்களுக்கு. கொண்டு சேர்த்து வருகிறோம். மீண்டும் ஒருமுறை. இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமாண் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகள், தொழற்சங்கங்கள் பெருந்தோட்ட நிறுவனங்கள். ஏனைய அமைச்சின் அதிகாரிகள். பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நாள் உள்ளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து பல்கலைக்கழங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விசேடமாக மருத்துவத் துறை, சட்டத் துறை, பொறியியல் துறை, வணிகத்துறை மற்றும் கலை துறைகளில் பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்களுக்கு அதிசக்தி புலமை பரிசில் திட்டத்தின் கீழ் 10 மாணவர்களுக்கு புலமை பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பிராந்திய அளவில் சிறப்பாக செயல்வடிவத்துக்குக்கப்பட்ட பிராந்திய பணிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன், இலங்கை சார்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனதின் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த கணக்கறிக்கைக்கான டாக்ஸ் விருதும் வழங்கி வைக்கபட்டது.

 

Related Articles

Latest Articles