பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி செயற்படவில்லை என்று இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை பொறுப்பேற்று , அவற்றை அரசு வழிநடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, அரச நிர்வாகத்தின்கீழ் உள்ள பெருந்தோட்டங்களில் சம்பள உயர்வு வழக்கப்படவுள்ளது எனவும், இந்த சம்பள பிரச்சினைக்கு விரைவில் முடிவுகட்டும் நோக்கில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.