🛑 “மலையகம் மகிழ்ச்சி” : காணி
உரிமை வழங்க ஏற்பாடு: 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு!
🛑 மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
🛑 இதன் ஆரம்பக்கட்டமாக 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன. இதற்குரிய காணி
உரித்து கையளிக்கும் ( காணி
உரித்துக்குரிய ஆவணம்) நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறுகின்றது. இந்திய தூதரக அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
🛑 பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தறை, மொனறாகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
🛑 மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். இதன் ஆரம்பக்கட்டமாக ஏற்கனவே வீடுகளைப் பெற்றவர்களுக்கு காணி உரித்து வழங்கும் நிகழ்வும் 12 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறும்.
🛑 மாடி லயன் திட்டம் அல்ல. மலையக மக்களுக்கு தனி வீடுகளே அமைக்கப்படும்.
🛑 மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
🛑 மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு வரவு- செலவுத் திட்டத்துக்கு முன்னர் தீர்வொன்றை காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
ஆர்.சனத்
(அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம்.)
வீடியோ கருத்து பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது










